மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பழனிச்சாமியே வெளியேறு".. இபிஎஸ்-க்கு சேலத்தில் எதிர்ப்பு.. முக்கிய நிர்வாகி பரபரப்பு போஸ்டர்.. அதிமுகவினர் போராட்டம் .!!
அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை பிரச்சனையானது தலைதூக்கி நீதிமன்றம் வரை சென்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் கட்சியை சொந்தம் கொண்டாடி வருகிறது.
ஆனால் முதற்கட்ட தீர்ப்பின்படி கட்சி எடப்பாடி பழனிச்சாமி வசம் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் அனைவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அதிமுகவிற்கு தொடர் தோல்வியைப் பெற்றுத்தந்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பதவியை ரத்து செய்து வெளியேற வேண்டும் என்று சேலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டிய ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான தினேஷ் என்பவரின் வீட்டை முற்றுகையிட்ட நிலையில், அவரின் வீட்டில் ஆட்கள் இருந்தால் அங்கிருந்து காவல் நிலையம் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளனர்.