#Breaking: அதிமுக கூட்டணியில் மீண்டும் பாமக? ராமதாஸ் பச்சைக்கொடி?.. பரபரப்பு பேட்டி.!



AIADMK PMK Rajya Sabha Seat Allocation Chances

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருக்கின்றன. கூட்டணிக்காக நிலைப்பாடுகளும் மாறி வருகிறது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்து, பின் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமக, யார் பக்கம் செல்லப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இவரின் பதவிக்காலம் நிறைவுபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இதனால் அதிமுகவிடம் பாமக தரப்புகள் மாநிலங்களவை சீட் தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

AIADMK

ராமதாஸ் சூசகம்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில், "ராஜ்யசபா சீட் தொடர்பான விசயத்திற்கு, திமுகவிடம் எப்போதும் நாங்கள் கேட்கப்போவதில்லை. அதிமுகவிடம் கேட்க வாய்ப்புகள் இருக்கின்றன" என ராமதாஸ் பேசினார்.

இதையும் படிங்க: #Breaking: "ஜெயிலுக்கு போகலையே?" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி..!

இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக நிறுவன ராமதாஸ், தனது சூசக பதிலை தெரிவித்துள்ளார். இதனால் பாமக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி செல்கிறதா? அதிமுக, பாஜக இணைந்த கூட்டணிக்கு பாமக நடுநிலை வகிக்கிறதா? என்ற கேள்வியும் அரசியல் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: "சீமானின் பாலியல் வழக்கு." 'பொய் வழக்கு அரசியல்' அன்புமணி ஆவேசம்.!