மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உதயநிதிக்கு சவால் விடும் அண்ணாமலை! சூடு பிடிக்கப்போகும் தேர்தல் களம்!!
சனாதனம் குறித்த சர்ச்சையில் சிக்கிய உதயநிதிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால் ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் உதயநிதி குறித்து பேசியுள்ளார்.
அதில், "சனாதன தர்மம் என்றால் என்னவென்று முதலில் உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்;
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஆண்டாள் கோயிலில் 30 பிரசுரங்களை படித்துள்ளார், இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம் தான்;
இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது தான் சனாதன தர்மம்;
உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா?
தேர்தலில் பிரச்சாரத்தின் போது, திமுக சனாதனத்தை ஒழிப்போம் என்று பிரச்சாரம் செய்யட்டும். பாஜக சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்று பார்த்துக்கொள்ளலாம்", என்று கூறியுள்ளார்.