திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இடத்தை ஆக்கிரமித்து பா.ஜனதா கொடியை நட்ட நிர்வாகிகள்!. பணம் கேட்டு மிரட்டியதால் கைது..!
சென்னை, புழல் பகுதியை சேர்ந்தவர் நவநீத். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். சமீபத்தி புழல், மாரியம்மாள் நகர் பகுதியில் 4.81 ஏக்கர் நிலத்தில் லே-அவுட் போட்டு வீட்டு மனைகளை விற்பனைக்கு தயார் செய்து வந்தார். இதனை தொடர்ந்து நவ்நீத்தை தொடர்பு கொண்ட புழல் 23 வது வட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகிகளான, காவாங்கரை, திருநீலகண்ட நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (51), தமிழன் நகரை சேர்ந்த ஏழுமலை ( 55) ஆகியோர் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதற்கு ரியல் எஸ்டேட் அதிபர் நவ்நீத் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர்கள் லே-அவுட் பணி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். பின்னர் இது கோவிலுக்கு சொந்தமான நிலம், பொது பாதை என்று கூற, அங்கு நடைபெற்ற லே-அவுட் பணியை தடுத்தனர். அங்கிருந்த மேலாளர் அமர்நாத் (39) உரிய ஆவணங்களுடன் இடத்தை கிரையம் பெற்றுள்ளதாக விளக்கினார்.
இதனை ஏற்காத பா.ஜனதா நிர்வாகிகள், அங்கு தங்கள் கட்சியின் கொடியை நட்டு கோஷமிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, மேலாளர் அமர்நாத் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேற்கண்ட இருவரும் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் கேட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.