மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பாஜக கே.டி ராகவன் திடீர் மூச்சுத்திணறலால் ICU - வில் அனுமதி; அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!
முன்னாள் பாஜக நிர்வாகி கே.டி ராகவன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களின் ஒருவராக, கடந்த 2021ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் கே.டி ராகவன். இவர் தொடர்பான ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து, அவர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
இந்த நிலையில், இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த கே.டி ராகவன், தற்போது திடீர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில், நாளை அவருக்கு திறந்த இருதய அறுவைசிகிச்சை நடைபெறும் என்று கூறப்படுகிறது.