மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: முதல்வர் தாக்கல் செய்த ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தீர்மானம் நிறைவேற்றம்; சட்டப்பேரவையில் அதிரடி.!
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தடைச்சட்ட தீர்மானம் நிறைவேறியது.
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பல உயிர்கள் பறிபோய்விட்ட நிலையில், ஏற்கனவே அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை ஜங்கிலி கேம்ஸ் நிறுவனம் நீதிமன்றம் சென்று தகர்த்தது.
அதனைத்தொடர்ந்து, திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி அதனை பல மாதங்கள் கிடப்பில் போட்டு, மாநிலங்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று திருப்பி அனுப்பினார்.
ஆனால், திமுக எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புகையில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களுக்கு ஆன்லைன் தடை சட்டத்தை அமல்படுத்த அதிகாரம் உண்டு என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் உட்பட ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
ஆன்லைன் சூதாட்டங்களில் 41 பேர் தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2022ல் அரசு சார்பில் பெற்றோர், பொதுமக்கள், ஆசிரியர்கள், இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டன.
சென்னையை சேர்ந்த வினோத் குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கூறி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று தீர்மானம் என்னால் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னர், சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.