மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகம் திமுக ஆட்சியில் தலைநிமிர தொடங்கிவிட்டது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
தமிழகம் திமுக ஆட்சியில் தலைநிமிர தொடங்கிவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள வேளச்சேரியில் தலைநிமிரும் தமிழகம் என்ற பேச்சு போட்டி நடைபெற்று சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், அவரும் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் தமிழகம் தலை நிமிர தொடங்கிவிட்டது. இதனை மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். 38 மாவட்டங்களில் இருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேச்சு மற்றும் கவிதை தற்போது மரியாதை அதிகரித்து வருகிறது. இவ்வித போட்டிகளை பார்த்த பின்பு, எனது கல்லூரி கால நினைவுகளை நான் சென்றுவிட்டேன். திராவிட மாடல் எதையும் இடிக்காது உருவாக்கும் என்றும், திராவிட மாடல் யாரையும் தாழ்த்தாது உருவாக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.