திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BREAKING : ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை.! அதிர்ச்சி தகவல் வெளியீடு.!
நெல்லை மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 2ம் தேதி ஜெயக்குமார் மாயமான நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக அவர் மீட்க பட்டு இருக்கின்றார். அவருடைய கை, கால்கள் ஒரு பலகையில் மின்சார கம்பியால் கட்டப்பட்டு இருந்த காரணத்தால் அவர் எரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகப்படுகின்றனர்.
இதை உறுதி செய்யும் வகையில் தற்போது உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி இருக்கிறது.அவரது கால்கள் கட்டப்பட்டு இருந்த நிலையில் வயிற்றின் மேல் பகுதியில் ஒரு இரும்பு தகடு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆகவே, அவர் கொல்லப்பட்டது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு லெட்டர் பேடில் மரண வாக்குமூலம் என ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதம் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் கொலை மிரட்டல் இருப்பதாகவும் என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் இவர்கள்தான் காரணம் எனவும் சிலருடைய பெயரை தன் கடிதத்தில் ஜெயக்குமார் குறிப்பிட்டு இருந்தார்.
இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தன் குடும்பம் மற்றும் மருமகன் என இரு தரப்புக்கும் எழுதிய இரு கடிதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். பணம் யார் யாருக்கு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை அவர் அந்த கடிதங்களில் ஜெயக்குமார் குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும், குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம், சட்டம் தன்னுடைய கடமையை செய்யும் என அதில் தெரிவித்து இருந்தார்.