மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சனாதனம் குறித்த உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி!!
கடந்த வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதில், சனாதனத்தை பற்றி அவதூறாக பேசியிருந்தார். அதாவது, சனாதனத்தை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும் என்றும், டெங்கு, மலேரியா, கொரோன போன்றவற்றை எதிர்க்க முடியாது ஒழிக்க வேண்டம் அது போல தான் சனாதனமும் என்று அவர் கூறியிருந்தார்.
இது நாடு முழுவதும் பேசும்பொருளானது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், திமுக கட்சியினர் மற்றும் அவர் சார்பு காட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவாக பேசியிருந்தார்.
இந்நிலையில் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான பவன் கேரா அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. சர்வ தர்ம கொள்கைகளில்தான் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் நம்பிக்கை கொண்டிருக்கலாம். அது அவர்களது தனிப்பட்ட விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.