சபாநாயகர் நடவடிக்கை தவறானது; அதிகாரத்தை மீறியுள்ளதாக எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம்



Danabal is wrong

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று 3வது நாள் விசாரணை நடந்தது. சபாநாயகர் தனபால் தனது அதிகாரத்தை மீறியுள்ளார் என எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் வேறு வேறு தீர்ப்பை வழங்கினர்.

18 MLA SUSPEND CASE

இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் 3வது நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.

தற்போது அவர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார். இதில், முதல் இரண்டு நாட்கள் விசாரணை நடந்து முடிந்த நிலையில் , இன்று 3வது நாள் விசாரணை நடந்தது.

அப்போது சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகையில், முதல்வரை எதிர்ப்பது என்பது அரசை எதிர்ப்பது போன்றதுதான். ஆட்சி கலைக்கும் அதிகாரம் உள்ள ஆளுநரை சந்தித்தது ஆட்சியை கலைக்கும் முயற்சிதான் என்று வாதிட்டனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், சபாநாயகர் தனபால் தனது அதிகாரத்தை மீறியுள்ளார். எனவே, அவர் எடுத்த நடவடிக்கை தவறானது என்று தெரிவித்துள்ளனர்.