மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பர்களுக்கு ரூ.56 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றசாட்டு.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மீ கட்சி, அம்மாநில தேர்தலிலும் களமிறங்கி முழு வீச்சில் களப்பணியாற்ற திட்டமிட்டுள்ளது.
இதற்காக அங்கு ஆம் ஆத்மீ கட்சியின் தலைவர்கள் அவ்வப்போது பேரணி, மாநாடுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் மத்திய பிரதேசத்தில் பேரணி நடந்தது.
பேரணியில் நேரடியாக கலந்துகொண்டவர் பேசுகையில், "பிரதமர் மோடியின் மும்பை நண்பருக்கு ரூ.34 ஆயிரம் கோடி கடனும், குஜராத் நண்பருக்கு ரூ.22 ஆயிரம் கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது அபத்தமானது.
அரசின் கருவூலத்தை காலி செய்யும் வகையில் பகல் கொள்ளை அடித்து வருகிறார்கள். கொள்ளை பணத்தை ஈடுகட்ட பால், அரிசி மீது வரியை அதிகரித்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்" என பேசினார்.