மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைவரே தெரியாத அதலபாதாளத்தில் அதிமுக - தேமுதிக விஜய பிரபாகரன் கடுமையான விமர்சனம்.. கொந்தளிக்கும் அதிமுக தொண்டர்கள்.!
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தேமுதிக இளைஞரணி தலைவர் தலையிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இழப்புக்கு பின் அதிமுக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுவிட்டது. தற்போது, தென்தமிழக அதிமுகவுக்கு வாக்கு வங்கியின் முக்கிய சக்திகளாக திகழ்ந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர்.
அதிமுக என்ற இயக்கம் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதை தேர்தல் ஆணையம், நீதிமன்றம் உறுதி செய்தாலும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்து அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், தேமுதிகவின் இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன் அதிமுக விவகாரம் குறித்து கூறுகையில், "அதிமுகவில் உள்ள தொண்டர்களுக்கே அக்கட்சியின் தலைவர் உறுதியாக தெரியவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை அக்கட்சியினர் தலைவர் என்கிறார்கள், நேரில் சந்திக்கிறார்கள். எங்களது கட்சியின் கட்டமைப்பு அனைத்து மாவட்டத்திலும் அப்படியே உள்ளது. நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்" என பேசினார்.