அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
திமுக கவுன்சிலர் கைது... ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு...!!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் பக்கிரிசாமியை கைது செய்தனர். இதை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பக்கிரிசாமி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பக்கிரிசாமி செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.