பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்த நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திர போராட்டம் - திமுக கனிமொழி!
18வது மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய அவர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி முழுவதும் பொது மக்களின் ஆதரவு முழுமையாக உள்ளதால் எனது வெற்றி உறுதி என்று நம்பிக்கை கிடைத்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதைப் போல இந்த மக்களவைத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகம் போன்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியை சுரண்டி வட மாநிலங்களில் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது.
மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரண தொகை கொடுப்பதற்கும், நமக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கூட தருவதில்லை. பொதுமக்களுக்கு தேவையான நிவாரண தொகையை கூட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
மக்களவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார். எத்தனை ரூல்சோ நடத்தினாலும் பாஜகவின் ஓட்டு எண்ணிக்கை நோட்டாவை தாண்டாது. தமிழ் மொழியை பற்றி பெருமையாக பேசும் பிரதமர் மோடி தமிழ் வளர்ச்சிக்கு போதிய நிதி கூட வழங்கவில்லை. ஆனால் யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு பல மடங்கு நிதி ஒதுக்கியுள்ளார என கூறியுள்ளார்.