திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BigBreaking: அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமெரிக்க டாலர்கள், பிரிட்டன் பவுண்டுகள்; ரூ.70 இலட்சம் பறிமுதல் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சென்னை, விழுப்புரம் உட்பட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலாகவே அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனை திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அவர் விசாரணையில் இருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை முதலாக அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்று வந்த சோதனையின் ரூ.70 இலட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ரூ.10 இலட்சம் மதிப்புடைய பிரிட்டன் பவுண்டுகள், அமெரிக்க டாலர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் அவற்றுக்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அமைச்சர் பொன்முடி, அவரின் மகன் கௌதம சிகாமணி எம்பி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.