மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இது பதவிக்காக அல்ல மக்களுக்காக"... திமுக- ம.நீ.ம கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேட்டி.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்து இருக்கிறது . தமிழகத்தில் ஆளும் திமுக பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் நடைபெற்று வருகிறது. தோழமை கட்சித் தலைவர்களுடன் திமுக தேர்தல் குழு தொகுதி பங்கீடு குறித்து அவர்களின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்திய கூட்டணியில் அங்கம் வகிப்பதாக அதன் தலைவரும் நிறுவனருமான கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். இந்தியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் அங்கம் வகிக்கும் என நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைக்கு தற்போது முடிவு கிடைத்திருக்கிறது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்தார்.
அவரை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் முதல்வர் மு.க ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை நடத்திய கமல்ஹாசன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அவர்களுக்கு மாநிலங்களவை எம்.பி சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளை ஆதரித்து மநீம பிரச்சாரம் செய்யும்.
கூட்டணி ஒப்பந்தத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் இது பதவிக்கான தேர்தல் அல்ல நாட்டு மக்களுக்கான விஷயம் என தெரிவித்திருக்கிறார். மேலும் மக்கள் நலனுக்காக யாருடன் கை கோர்க்க வேண்டுமோ அவர்களுடன் கைகோர்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.