மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிளாக் மெயில் பண்றதுக்கெல்லாம் கட்சி வச்சிருக்காங்க - பாஜக-வின் நிலை குறித்து உதயநிதி விமர்சனம்.!
சென்னை கோவளத்தில் செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டு நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பாஜக ஒரு கட்சியே இல்லை. அது பிளாக் மெயில் செய்யும் கட்சி.
அதிமுகவினர் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி யாருக்கேனும் உண்மையாக இருந்திருக்கிறாரா?. ஆளுநருக்கு அடிமையாக இருக்கக்கூடியவர் அவர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பாஜகவின் வாசலில் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். பாஜக ஒரு கட்சியே இல்லை.
அது ஆடியோ வீடியோ கட்சி. பிளாக் மெயில் செய்யும் கட்சி. பாஜகவும் அதிமுகவும் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி மாபெரும் வெற்றியை அடையும்" என்று தெரிவித்தார்.