மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் - அமைச்சர் துரைமுருகன்!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்தையும் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர திமுக சார்பில் பிச்சனூர் தேரடி பகுதியில் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதால் எந்த பயனும் கிடையாது. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி அலை வீசுகிறது. அதேபோல் வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது. இந்த முறை நிச்சயமாக மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
பாஜக தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். வேட்டி கட்டியவர் கைகாட்டும் நபர்தான் பிரதமராக வந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.