#Justin || சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் ஏ.வ.வேலு..! கலைஞரை பெருமைப்படுத்தவே அப்படி கூறினேன்.!!



E V Velu Press Meet at madurai

மிழகத்தின், மதுரை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தற்போது ஆய்வு செய்து வருகிறார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வருகின்ற ஜூலை 15ம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கப்பட உள்ளார். இதில், ரூ.134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகம், மேலும் ரூ.60 கோடி மதிப்பிலான புத்தகங்கள் வாங்கி குவித்துவைத்துள்ளார்.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அமைச்சர் ஏ.வ.வேலு, "கலைஞர் நூற்றாண்டு விழா தினத்தை ஒட்டி, இந்த நூலகம் திறக்கப்பட இருப்பதாகவும், வருகின்ற ஜூலை மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பர் என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அவர் பேசியபோது, உயர்நீதிமன்ற கிளை கலைஞர் போட்டோ பிச்சை என்று பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும்,  உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என்று பேசுவதற்கு மாறாக பிச்சை என்று தவறாக பேசிவிட்டேன் என்று வருந்தியுள்ளார். கலைஞரை பெருமைப்படுத்தும் வகையில் பேசிய போது தவறான வார்த்தைகள் வந்து விட்டதாகவும் அதில் தெரிவித்துள்ளார். கலைஞர் போட்ட பிச்சை என்று நான் பேசிய வார்த்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள அவர், நீதிமன்றம் மீதும், நீதி துறை மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.