குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி உறுதி..!
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த ஊரான எடப்பாடியில் செய்தியாளர்களை சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை. அ.தி.மு.கவிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இனிமேல் யாராவது செயல்பட்டால் அவர்களுக்கும் கட்சியில் இடமில்லை, இதற்கெல்லாம் தற்போதுமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் உடன் மீண்டும் இணைந்து செயல்படும் எண்ணம் இல்லை. அ.தி.மு.கவை முடக்க நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள்.
அ.தி.மு.க இப்போதும் வலுவான எதிர்கட்சியாக உள்ளது. அ.தி.மு.க வில் பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். கடந்த காலங்களில் சுமார் 300 பேர் தி.மு.கவில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்துள்ளனர். இலவச பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது கண்டிக்கத்தக்கது. தி.மு.க அமைச்சர்கள் பலர் பொதுமக்களை அவமதிக்கும் வகையில் பேசிவருகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.