மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நோ கமெண்ட்ஸ்!.. அவரை பற்றி பேச வேண்டாம்: டெல்லியில் செய்தியாளர்களை அதிரவைத்த எடப்பாடி பழனிசாமி..!
நேற்று அவசரகதியில் டெல்லிக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்களுடைய சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அவருடன் ஆலோசித்தேன்.
இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சாரி, வணக்கம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு புறப்பட்டு சென்றார்.