ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு: மேளதாளங்களுடன் அதிர்ந்த மதுரை ஏர்போர்ட்..!

பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சிவகாசி புறப்பட்டு செல்லும் எடப்பாடி பழனிசாமி, அங்கு காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் பின்னர், சிவகாசியில் இருந்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். இதனை தொடர்ந்து மதுரை, பழங்காநத்தம் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் அதன் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த பொதுக்கூட்டம் முடிந்த பின்பு மதுரை விமான நிலையத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.