நீட் தேர்வு ரகசியத்தை இதுவரை கூறவில்லை.. திமுகவை விளாசி தள்ளிய எடப்பாடி பழனிச்சாமி!



Eps roasted DMK in Sivagangai

18வது மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

sivagangai

அப்போது பேசிய அவர், சிவகங்கை தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை எதிர்த்து நமது வேட்பாளர் போட்டியிடுகிறார். ஸ்டாலின் சவால் விட்டு பச்சை பொய் பேசி வருகிறார் எனவும் பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கூறியுள்ளார்.

மாநில நிதியில் 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவேரி குண்டாறு திட்டத்தை தொடக்கி வைத்தேன். ஆனால் அந்தத் திட்டத்தை ஸ்டாலின் நிறுத்திவிட்டார். நான் ஒரு விவசாயி என்பதால் அவ்வளவு பெரிய தொகையை அந்த திட்டத்திற்கு ஒதுக்கினேன் என கூறியுள்ளார்.

sivagangai

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தன்னிடம் ஒரு ரகசியம் இருக்கு என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், இதுவரை அந்த ரகசியத்தை சொல்லவே இல்லை. தொடர்ந்து நீட் தேர்வு நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நீட் தேர்வு ரத்து செய்ய அதிமுக அமைச்சர்கள் முயன்ற போது அதனை நீதிமன்றத்தில் முறையிட்டு தடுத்தவர் முன்னாள் அமைச்சரின் மனைவிதான் என கூறியுள்ளார்.

மேலும் கஜா புயலில் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காப்பாற்றியது என்னுடைய தலைமையிலான அதிமுக அரசு. ஆனால் புயல் இல்லாமலே மழை பெய்ததற்கே திமுக அரசால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் என அவர் கூறியுள்ளார்.