மாநிலங்களவையில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா தோல்வி: அதிர்ச்சியில் பா.ஜனதா எம்.பிக்கள்..!



Failure of General Civil Law Personal Bill

பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை மாநிலங்களவை பாஜக எம்.பி கிரோடி லால் மீனா அறிமுகம் செய்து வைத்தார். இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

புதுடெல்லி, மாநிலங்களவை பாஜக எம்பி கிரோடி லால் மீனா பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். எதிர்கட்சியினர் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சித்து வருகிறது. பொது சிவில் சட்டம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட தனிநபர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் பாஜக எம்பி கிரோடி லால் மீனா அறிமுகம் செய்த போது, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், மதிமுக போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

எனவே, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மசோதாவை அறிமுகப்படுத்துவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தினார். வாக்கெடுப்பில் 63 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும், 23 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்ததால் மசோதாவை தாக்கல் செய்வது தோல்வியில் முடிவடைந்தது.