கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
#LokSabha: "பிரதமராக வரக்கூடிய ஆற்றல் உடையவர் அண்ணாமலை" - நடிகை ஆர்த்தி பேட்டி.!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் ஆர்த்தி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் விஷால் தனுஷ் ஆகியோருடனும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
காமெடி நடிகரான கணேஷ் வரலாறு என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆர்த்தி அவருடன் இணைந்து மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறது . அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்த்தி நடிகர் விஜய்க்கு அண்ணாமலை அளவிற்கு அரசியல் அறிவு இருக்கிறதா.? என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் நடிகர் விஜய் சினிமாவில் தனக்கான இடத்தை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்குவது மிகவும் தைரியமான முடிவு என பாராட்டி இருக்கிறார்.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலையை வெகுவாக புகழ்ந்த இவர் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் தெரிவித்தார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இருக்கும் திறமைக்கு வருங்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வருவார் என்றும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.