3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும்..!! அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை..!!
கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி, இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளார்கள் சந்திப்பின் போது கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில், கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோதிகள் எப்போதுமே தங்களது இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். இது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உக்ரைன் போரால் தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு நீட் தேர்வு இருப்பது ஒரு தடையாக உள்ளது, எனவே இது குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பேசிவருகிறோம். விரைவில் அவர்கள் தங்களது படிப்பை தொடருவார்கள் என்று நம்புவதாக செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.