திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#தமிழ்நாடு சட்டப்பேரவை: நீர் மேலாண்மையை அதிகரிக்க பாமக., விசிக எம்.எம்.ஏக்கள் திமுக அரசிடம் கோரிக்கை.!!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது.
சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். அத்துடன் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்களும் பதிலளித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டத்தில் இபிஎஸ் அணியினர் கலந்து கொள்ளாத நிலையில், ஓபிஎஸ் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஐயப்பன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் "கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியை தூர்வாரி அதன் கொள்ளவை உயர்த்த அரசு முன்வருமா?" என்ற கேள்வியினை எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தண்ணீர் அதிகமாக இருப்பதால் தூர்வார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்ததும் உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதில் அளித்துள்ளார்.
மேலும் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி, "காவிரியில் ஐந்து மாதத்தில் 535 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது. இவ்வாறு நீரை வீணாக்குவதற்கு பதிலாக, சேமிப்பதற்கு அரசு வசதியை ஏற்படுத்தி தருமா?" என்று கேள்வியை எழுப்பினார்.
அதற்கு நீர்வரத்துறை அமைச்சரான துரைமுருகன், "ஒகேனக்கல் பகுதியில் மட்டுமல்லாமல் காவிரி செல்லும் அனைத்து இடங்களிலும் நீர் சேமிப்பதற்கான திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும்" என்று பதில் அளித்துள்ளார்.