திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெடி வெடித்து கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்! கடுப்பான எச். ராஜா!!
நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில், அக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி முறிவு விவகாரத்தில் பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயார். தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது. எதிர்வரும் தேர்தலுக்கு நமது தலைமையில் மட்டுமே கூட்டணி. அதில் பாஜக இருக்காது என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து எச். ராஜா அவர்களிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்:- "எதோ இவங்கள நாங்க கட்டிப்போட்டு வைத்திருந்த மாதிரியும் இப்போ இவர்கள் விடுதலை ஆன மாதிரியும் பட்டாசு வெடிச்சு கொண்டாடிட்டு இருகாங்க. வாட் எ நான்சென்ஸ்!
ஜெயலலிதா மறைந்த பிறகு, சிதறிப்போன அதிமுகவை ஒட்ட வைத்ததே பாஜக தான். நாங்கள் மட்டும் இல்லையென்றால், அதிமுக என்ற கட்சியே இல்லை. அந்த நன்றியை அதிமுக தலைவர்களா மறந்துவிடக் கூடாது", என்று கூறியுள்ளார்.