"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் CAA சட்டம் ரத்து" - மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா பேட்டி.!



if-congress-comes-to-power-caa-act-will-repeal-pawan-kh

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி இந்த வருட பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019 நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்  குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) நிறைவேற்றப்படாது என அந்தக் கட்சியின் மூத்த தலைவரான பவன் கேரா தெரிவித்திருக்கிறார்.

politicsஇது தொடர்பாக அஸ்ஸாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 அமல்படுத்தப்படாது என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 அசாம் மாநிலத்தின் உரிமையை காக்கும் 1971 ஆம் ஆண்டின் கட் ஆப் தேதியை நீக்குகிறது. சிஏஏ அமல்படுத்தப்படும் போது 2014 ஆம் வருடம் புதிய கட் ஆப் தேதியாக இருக்கும். இது அசாம் தியாகிகளின் தியாகங்களை அவமானப்படுத்துவது போன்ற செயல் எனவும் கூறி இருக்கிறார்.

politicsமேலும் தொடர்ந்து பேசிய அவர் கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தை பிரதமர் மோடி பார்வையிடாதது ஏன்.? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மணிப்பூர் மாநிலமும் இந்தியாவின் ஒரு பகுதி தான். அடுத்த வாரம் அசாம்  வரும் பிரதமர் மணிப்பூர் மாநிலத்தை பார்வையிட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அசாம் மாநில முதலமைச்சர் ஹேமந்தா பிஸ்வாஸ் தனது ஹெலிகாப்டரை பிரதமர் மோடிக்கு கொடுத்து அவர் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்வதற்கு உதவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.