மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களை தவறான பாதையில் வழிநடத்தும் இந்திய எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி கடும் விமர்சனம்.!
2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தியாவில் இருக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. 2024ல் ஆட்சியை தக்கவைக்க பாஜக தரப்பும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தரப்பும் முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்படும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கி அதற்கு I.N.D.I.A என பெயரிட்டது.
இதனால் 2024 மே மாதம் நடைபெறவுள்ள தேர்தல் பரபரப்பு தற்போதில் இருந்து தொடங்கியுள்ளதால், எதிர்க்கட்சிகள் கிடைக்கும் விஷயங்களை அரசியல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த பாராளுமன்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, கிழக்கிந்திய கம்பெனி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்று தாய்நாட்டை அதன் பெயராலேயே எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இது எதிர்க்கட்சிகளின் விரக்தி மற்றும் ஏமாற்றத்தை உணர்த்துகிறது.
அவர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அவர்களை எதிர்கட்சியிலேயே நிறுத்தும். 2024ல் பாஜக மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். தனது அரசாங்கத்தின் அடுத்த ஆட்சி இந்தியாவை மிகப்பெரிய மூன்றாவது பொருளாதார மண்டலமாக உயர்த்தும் என கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.