தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
துரோகத்தின் அடையாளம் இவர்தான்.... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.!
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்ட சூழலில், கட்சியை வழிநடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதன்படி, இக்கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் பங்கேற்றனர். 5 பேர் சில காரணங்களால் வர முடியவில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். 4 பேர் பங்கேற்கவில்லை. வரும் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டம் கூட்ட அழைப்பிதழை தபாலில் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக நீடிப்பாரா என்பது ஜூலை 11ல் நடக்கும் பொதுக்குழுவில் தெரியவரும்.
அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். பன்னீர்செல்வத்திற்கு கட்சியின் அடிப்படை விதிகளே தெரியவில்லை. தூங்குபவரை எழுப்பிவிடலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என கூறினார்.