பிரபல அரசியல் கட்சியில் இணைந்த கலா மாஸ்டர்! யாருக்கு ஆதரவாக தெரியுமா?
சினிமாத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக பிரபல நடன இயக்குநராக இருந்தவர் கலா மாஸ்டர். திருமணத்திற்குப் பின்னர் திரைத்துறையிலிருந்து விலகிய இவர்
தனியார் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கலா மாஸ்டர் அரசியலில் களமிறங்கியுள்ளார்.
பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அமமுக கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேலும் இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இந்நிலையில் கலா மாஸ்டர் இன்று தினகரனை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், ஒரு தலைவர் என்றால் நமக்கு
முதலில் அவரை பிடித்திருக்க வேண்டும். எனக்கு தினகரனை மிகவும் பிடிக்கும்.அவரது பேச்சு, மக்கள் மீது கொண்ட அக்கறை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டே நான் அமமுகவில் இணைந்தேன். நான் 30 வருடங்களாக திரைத்துறையில் இருந்தவள். கட்சியில் இருந்து என்ன வேலை கொடுத்தாலும் திறம்பட செய்வேன் என கலா மாஸ்டர் கூறியுள்ளார்.