காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்; சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் பதில்.! 



Kanchipuram firecracker explosion issue

பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்து விவகாரத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் பதில் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை கிராமத்தில் இருக்கும் பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடிவிபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் போது பதில் அளித்த உத்திரமேரூர் திமுக எம்.எல்.ஏ சுந்தர், "வெடிவிபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு பிரதமர் சார்பிலும், முதல்வர் சார்பிலும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன" என கூறினார். 

அதிமுக எம்.எல்.ஏ மரகதம் பேசுகையில், "பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு நிவாரண தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்" என கூறினார்.

tamilnadu political

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி, "பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகளை தவிர்க்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய அனுமதியோடு பட்டாசு ஆலைகள் செயல்பட்டாலும், விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, எதிர்காலத்தில் அவை நடக்காமல் parkka வேண்டும்" என கூறினார். 

த.வா.க தலைவர் எம்.எல்.ஏ வேல்முருகன் பேசுகையில், "பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார். 

அப்போது பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன், "குருவிமலை பட்டாசு ஆலை கடந்த 1991 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியுடன் அங்கு பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், திருவிழா காலத்திற்காக கூடுதல் பணியாளர்களுடன் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இதனால் திடீரென எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது" என கூறினார்.