மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவந்த எம்.பி. மீது கத்தி வீச்சு! அதிர்ச்சி சம்பவம்!
நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராசு, போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் வேதாரண்யம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று செல்வராசு ஜீப்பில் சென்றார். இந்தநிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் அகஸ்தியன்பள்ளி செல்வராசு திறந்த ஜீப்பில் நின்றுகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார்.
அவர் நின்ற ஜீப்புக்கு முன்னே ஏராளமானோர் நின்றுகொண்டிருந்தனர். பாதுகாப்புக்காக காவலர்களும் இருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் செல்வராசு மீது கத்தியை வீசியுள்ளார். அந்த கத்தி அவர் மீது படாமல் ஜீப்பின் முன்பக்கத்தில் பட்டு கீழே விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனையடுத்து அந்த கத்தி வீசிய மர்ம நபரை தேடியபோதும், அந்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற வந்த எம்.பி. மீது கத்தி வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.