திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Justin || அமைச்சருடன் அவசர அவசரமாக மும்பை புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!!
மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் யார் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்வார்கள் என்று கடைசி நிமிடங்களில் தான் தெரியவரும். ஆனால் திமுக, காங்கிரஸ் கூட்டணியானது தொடரும் என்பது ஊறுதியானது.
இந்த நிலையில், இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார். திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலுவும் அவருடன் செல்கிறார்.
இந்த 'இந்தியா' கூட்டணியின் கூட்டம், மும்பையில் இன்றும் நாளையும் இரு தினங்கள் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 'இந்தியா' கூட்டணியின் இலட்சினை செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.