மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#சென்னை மழை : "குடிசை பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை" திமுக அமைச்சர்கள் விளக்கம்.!
அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அப்போதும் குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை.
மாம்பலம் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. வரும் நாட்களில் பெய்ய இருக்கின்ற மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் தயாராக இருக்கிறது. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு இருப்பதால் மழை நீர் வேகமாக வடிந்து கொண்டு இருக்கிறது.
மழை நீர் வடிகால் பணிகள் பலன் கொடுத்துள்ளது. மின் இணைப்பு துண்டான இடங்களில் மீண்டும் இணைப்பு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளை வழங்கவும், மருத்துவ முகாம்கள் நடத்தவும் முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்." என்று கூறியுள்ளனர்.