8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
சமையல் கியாஸ் விலை குறைப்பு: 'இந்தியா' கூட்டணிக்கு கிடைத்த வெற்றி..!! மம்தா பானர்ஜி பெருமிதம்..!!
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு ‘இந்தியா’ கூட்டணியால் நிகழ்ந்த விளைவு என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களின் மாதந்தோறும் உயர்ந்து வந்த நிலையில், அதன் விலையில் ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.400 குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் தற்போது வீட்டுஉபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,118.50 க்கு விற்கப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டும் குறைக்கப்பட்டது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மட்டும் குறைக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 30) அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை குறைப்பு குறித்து பேசிய மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த 2 மாதங்களில் 'இந்தியா' கூட்டணியின் 2 கூட்டங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாகவே தற்போது கியஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இது, 'இந்தியா' கூட்டணியால் நேர்ந்த விளைவு என்று அவர் கூறியுள்ளார்.