மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகும் காங்கிரஸ் எம்.பி.?! நெருங்கிய வட்டத்தில் இருந்து கசிந்த தகவல்.!



may-congress-thirunavukarasu-jump-to-admk

அதிருப்தியில் எம்.பி :

சமீபத்தில் தனக்கு எம்பி சீட்டு வழங்கப்படாது என்பதை அறிந்த விஜயதரணி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் அக்கட்சியில் இருந்து விலகப் போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 
திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசருக்கு சீட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதியில் மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு சீட்டு வழங்கப்பட்டது. இதனால், திருநாவுக்கரசர் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

thirunavukkarasu

அதிமுகவுக்கு கட்சித்தாவல்?

இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தற்போது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 
முன்னதாக திருநாவுக்கரசர் தனது அரசியல் பயணத்தை முதலில் அதிமுக கட்சியில் இருந்து தான் தொடங்கினார். 1977 இல் இருந்து 1996 வரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் தான் திருநாவுக்கரசர். 

thirunavukkarasu

அரசியல் பயணம் :

அதன் பின்னர் எம்ஜிஆரின் அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணிபுரிந்து இருக்கின்றார். பின்னர், 1996 இல் ஜெயலலிதாவுடன் மனக்கசப்பு ஏற்பட்ட பின்னர் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். பின்னர் அந்த கட்சி பாஜகவுடன் இணைக்கப்பட்டது. 
எனவே திருநாவுக்கரசர் 1999இல் பாஜக சார்பில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதனை தொடர்ந்து, 2009 இல் தான் அவர் காங்கிரஸில் சேர்ந்து தற்போது வரை பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.