மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூன்றாவது அ.தி.மு.க உதயம்: அ.தி.மு.க (சசி) அணியில் திவாகரனின் கட்சி இணைப்பு..!
அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில் சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது 2500 உறுப்பினர்களை கொண்ட, இது வரையிலும் எந்த தேர்தலிலும் போட்டியிடாத அண்ணா திராவிட கழகத்தை அ.தி.முக (சசி)கலா அணியுடன் இணைத்தார். இந்த இணைப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் சசிகலா பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் அ.தி.மு.க (சசி) அணியில், திவாகரன் தனது அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்து கொண்டார். விழா மேடையில் சசிகலாவுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலா முன்னிலையில் மேடையில் பேசிய அவரது அண்ணன் திவாகரன் கண்ணீர் சிந்தினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
சசிகலாவுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள தனது கட்சியின் 2500 க்கும் மேற்பட்ட சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைந்துள்ளனர். ஜெயலலிதா, சசிகலாவுக்கு மந்திரி பதவி அளித்து அழகு பார்க்க நினைத்தார். ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக சசிகலா இருந்தார். இவ்வாறு திவாகரன் பேசினார்.