மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் சீமான் - அமைச்சர் அன்பரசன் பரபரப்பு குற்றசாட்டு.!
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம், பேரூர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ அன்பரசன், பள்ளி மாணவ-மாணவியர்கள், பெண்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், "பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. ஆவேசமாக பேசுபவர் தலைவராக முடியாது.
அவரின் ஆவேசமான நாடகத்தன அரசியல் பேச்சையும், மூளைச்சலவை செய்யும் விடீயோக்களையும் இளைஞர்கள் அதிகஅளவில் செல்போனில் பார்த்து வருகிறார்கள். இது ஆபத்தானது. அதற்கு இளைஞர்கள் அடிமையாக வேண்டாம். கலைஞரது பேச்சினை பாருங்கள், வரலாற்றை படியுங்கள்" என பேசினார்.