மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவர்கள் தற்கொலை செய்வது வாடிக்கை தான்! நீட் குறித்து ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து!!
தற்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தான். நீட் தேர்வால் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொள்பவரின் வரிசை நீண்டு கொண்டே வருகிறது.
நேற்று திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் எதிர்ப்பு போராட்டத்தை, உண்ணாவிரத போராட்டமாக நடத்தி இருந்தார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் முழக்கமிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் அவர்களிடம் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர், 'மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் வாடிக்கையாக நடப்பது தான் இதனை அரசியலாக்கி பேசக்கூடாது என்று பதில் அளித்துள்ளார்.