மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கருணாநிதியின் மறுவுருவமாக உதயநிதி ஸ்டாலின் எனும் நான் - அமைச்சர் உதயநிதி அதிரடி பேட்டி.!
பெரியார், அண்ணா, கருணாநிதியின் மறுஉருவமாக செயல்படுவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நாகப்பட்டினம் நகரில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பாஜக மற்றும் அவர்கள் சார்பு அணிக்காக சி.பி.ஐ, அமலாக்கத்துறை செயல்படுகிறது. அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோரின் வீட்டிலும் சோதனை நடந்தது.
அவர்களால் இன்று வரை அவர்களை கைது செய்ய இயலவில்லை. பாஜக எத்தனை சோதனை நடத்தினாலும் திமுகவில் கிளை செயலாளர் கூட பயம்கொள்ளமாட்டார்கள். நான் பெரியார், அண்ணா, கருணாநிதியின் மறுஉருவமாக செயல்படுவேன்" என பேசினார்.