நூபுர் சர்மா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!



No action should be taken against Nupur Sharma.. Supreme Court order..!

பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசுகையில், சிவலிங்கத்தை பற்றி ஒருவர் தவராக‌பேசிய கருத்துக்கு எதிர் கருத்தாக நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனால் பல மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பாரதிய ஜனதா கட்சி தலைமை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. நூபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதற்கிடையே, நுகர் சர்மா தன்னை கைது செய்ய தடை விதிக்கவும், பல்வேறு மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூபுர் சர்மாவின் உயிருக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறினார். இந்நிலையில், நூபுர் சர்மா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ள மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்  இந்த வழக்கை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.