காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கிப் பார்!..: எடப்பாடியை சீண்டும் ஓ.பி.எஸ்..!
தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்திப்பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.
அதிமுக தற்போது இரண்டு அணியாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றோரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் மாநில நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும், நியமித்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட 88 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் ரோட்டில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரமாரியாக விமர்சனம் செய்தார். சோதனை காலங்களில் என்னை தாங்கி பிடித்த தொண்டர்கள் தாங்கி பிடித்தனர். ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்று தீர்மானம் கொண்டு வந்தோம், ஆனால் அந்த தீர்மானத்தை ரத்து செய்ய எப்படி மனம் வந்தது, அந்த மகா பாவிகளை நாடு மன்னிக்காது என்று பேசினார். மேலும் ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் என தொண்டர்கள் மனதில் என்றும் இருக்கிறது என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது, இனி பப்பு வேகாது. தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பார் என எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்தார். மேலும் கட்சியை கபலிகரம் செய்ய நினைத்தால் ஒருபோதும் அது நடக்காது என்று பேசினார்.