நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
கவுன்சிலர் கூட ஆக முடியாது - பாஜக அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு.!

தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர், நேற்று திருச்செந்தூர் கோவிலில் உள்ள கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பு தொடர்பாக ஆய்வு செய்தனர்.
ஆதங்க குரல் எழுப்பிய பக்தர்கள்
அப்போது, கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள், தங்களை காலை நேரத்தில் இருந்து மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், வெளியே விட்டால் வீட்டிற்காவது செல்வோம், குழந்தைகள் பசியால் வாடுகிறது. எவ்வுளவு நேரம் நிற்பது? என ஆதங்க குரல் எழுப்பினர்.
இதையும் படிங்க: பெண் காவலரிடம் செயின் பறிப்பு.. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது - அண்ணாமலை கண்டனம்.!
நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை, உணவு, தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தபோது, “திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி… pic.twitter.com/uI3gREWDeh
— K.Annamalai (@annamalai_k) January 19, 2025
அங்க நிக்கிறான், இங்க கத்துறான்
அமைச்சர் மற்றும் எம்.பி வரும்போதும் கூக்குரல் தொடர, மக்களிடம் கனிமொழி என்ன என கேட்கச் சென்றார். அப்போது, அமைச்சரோ கனிமொழியிடம் திருப்பதி போனா நிற்கிறான், திருச்செந்தூரில் கத்துறான் என கூறினார். இது விடியோவாக வெளியாகி கண்டனத்தை குவித்தது. பாஜக அண்ணாமலையும், தனது கண்டனத்தை அமைச்சருக்கு எதிராக பதிவு செய்திருந்தார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை மாற்றி அமைக்கப்பட்டு, சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என கூறினார்.
திராவிட மாடல் ஆட்சி
இந்த விஷயத்திற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "பாஜக அண்ணாமலை கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றிபெற இயலாது. பாஜகவின் அண்ணாமலை தான் ஆணவத்துடன் செயல்படுகிறார். நாங்கள் மிகுந்த அடக்கத்துடன் செயல்படுகிறோம். அதுவே திராவிட மாடல் ஆட்சி. எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொண்ட விஷயத்தை வேண்டும் என்றே அண்ணாமலை ஊதி பெரிதாக்கி, அவதூறு செய்து வருகிறார் அண்ணாமலை" என கூறினார்.
இதையும் படிங்க: தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர் - அண்ணாமலை புகழாரம்.!