அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது.? அவரது மகன் வெளியிட்ட தகவல்!
முன்னாள் ஜனாதிபதியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான பிரணாப் முகர்ஜி கடந்த 9- ஆம் தேதி உடல்நல கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் பிரணாப்பின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவரது மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.மருத்துவமனையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
With All Your good wishes & sincere efforts of the Doctors , my father is stable now ! His vital parameters continue to remain under control & manageable ! Positive signs of his improvement is noticed ! I request you all to pray for His speedy recovery !🙏#PranabMukherjee
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 19, 2020
இந்நிலையில் தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டரில், உங்கள் அனைத்து நல்வாழ்த்துக்களாலும், மருத்துவர்களின் தீவிரமான முயற்சியிலும், என் தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தின் அறிகுறிகள் கவனிக்கப்பட்டு வருகின்றன! அவர் விரைவாக குணமடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.