மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீட்டுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி உண்ணாவிரதம்! தலைநகரங்களில் வலுக்கும் போராட்டம்!!
நீட் தேர்வுக்கு அனிதாவில் தொடங்கி பலர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஜெகதீஷ் என்னும் மாணவன் உயிரிழந்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து ஜெகதீசன் தந்தையும் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளார். நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ரவியை எதிர்த்து வருகின்ற 20 தேதி அன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும் என்றும் திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி அறிவித்துள்ளது.