மாநிலத்திற்கே பெருமை சேர்த்த ராகுல் காந்தியின் பாதயாத்திரை: விஜய் வசந்த் எம்.பி பெருமிதம்..!



Rahul Gandhi's padayatra made the state proud: Vijay Vasant MP is proud

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்கினார். கடந்த வாரம் கன்னியா குமரியில் யாத்திரையை தொடங்கிய அவர் நேற்று முன்தினம் கேரளாவுக்கு சென்றடைந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் வசந்த் இந்த யாத்திரைக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் சார்பில், இந்தியாவில் ஒற்றுமையை நிலை நிறுத்தவும் , இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற் கொண்டு உள்ளார். 7 ஆம் தேதி பொதுக்கூட்டத்துடன் குமரியில் தொடங்கிய பயணம் 8, 9, 10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.

லட்சக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பயணம் தேசிய அளவிலும் , சர்வதேச அளவிலும் , நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது. இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில , மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து ஒத்துழைப்பும் தந்த குமரி மாவட்ட எம்.எல்.ஏ. க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே. டி. உதயம் , டாக்டர் பினுலால்சிங், நவீன்குமார், வட்டார, நகர. பஞ்சாயத்து தலைவர்கள். துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் அனைத்து ஒத்துழைப்பும் அளித்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகம், மாநகர, நகர பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ராகுல்காந்தியை பெருந்திரளாக கூடி வரவேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.