மோடியை வீழ்த்துவதே லட்சியம் !! தன் பதவியையே விட்டு கொடுக்க துணிந்த ராகுல்



rahul ready to leave PM candidate

ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இல்லாத யாரை வேண்டுமென்றாலும் பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் தயார் என தகவல் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதில் சில கட்சிகள் தயக்கம் காட்டுகிறது. மூன்றாவது கூட்டணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபடும் மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ் தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்க மம்தாவிடம் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. மம்தாவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் டெல்லியில் முகாமிடுகிறார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், இணக்கமான முறையிலான கூட்டணியென்றால் காங்கிரசுடன் இணைய தயார் என கூறிவிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பிலிருந்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. 

rahul gandhi

2019-ல் மோடி பிரதமர் ஆக வருவதை தடுக்க காங்கிரஸ், வலுவான கூட்டணியை  உருவாக்க வேண்டும் என்பதில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்புலம் இல்லாத ஒருவரை பிரதமர் வேட்பாளாராக ஏற்கவும் தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டணி அமைந்தால் எதிர்க்கட்சிகள் வரிசையில் பெண் ஒருவர் பிரதமர் ஆக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வழிவிடுவாரா என்ற நிலைப்பாட்டிற்கு, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேராத ஒருவரை பிரதமராக பார்க்க அவர் தயாராகவே உள்ளார்,”என்று தகவல்கள் கூறியுள்ளது.  
 
எதிர்க்கட்சிகள் வரிசையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற யூகங்கள் எழும் நிலையில் காங்கிரஸ் தரப்பு தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கிறது.

பா.ஜனதா கூட்டணியில் தெலுங்குதேசம், சிவசேனா போன்ற கட்சிகள் அதிருப்தியில் உள்ள நிலையில், பா.ஜனதா போதுமான தொகுதிகளை கைப்பற்ற முடியாது என காங்கிரஸ் பார்க்கிறது என அந்த தகவல்கள் தெரிவித்துள்ளது.