திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என் அண்ணன் வெற்றி பெற்றால் அப்பாவின் ஆத்மா சாந்தியடையும் - விஜயகாந்த் இளைய மகன்!
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது அண்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார்.
அதன்படி, இன்று பிரச்சாரம் செய்த போது பேசிய அவர், இது எனது முதல் தேர்தல் பிரச்சாரம் எனவும் என்னுடைய அண்ணனுக்காக நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன். என்னுடைய அப்பாவை வெற்றி பெற வைக்கவில்லையே என யாரும் வருத்தப்பட வேண்டாம். என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் அண்ணன் விஜய பிரபாகரனை வெற்றி பெற வைத்தாலே என் அப்பா ஆத்மா சாந்தியடையும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தொகுதிக்கு எந்த பிரச்சனை இருந்தாலும், அதை என் அண்ணன் தீர்த்து வைப்பார். உங்கள் வீட்டு பிள்ளையாக விஜய பிரபாகரன் தேர்தலில் நிற்கிறார் எனவும் அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.